இந்நிறுவகம் பல வருடங்களாக இலங்கையின் கமநலப் பிரிவின் சமூக - பொருளாதார துறைகளில் தலைசிறந்த தேசிய நிறுவகமாக முன்னேறி உள்ளது. மேலும் அரச மற்றும் அரச சார்பற்ற ஆகிய இரு பிரிவுகளிலும் விவசாயிகளுக்கும் வெளிக்கள அலுவலர்களுக்கும் முகாமையாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட பயிற்சியை வழங்க அவசியமான திறன்களும் அடிப்படை வசதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவகத்தினால் விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் கொள்கை வகுப்போருக்கு அவசியமான இற்றைப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் தகவல்களை வழங்குதலும் ஈடேற்றப்படுகின்றது. நிறுவகத்தின் பெயரும் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகமென 1995 பெப்ருவரியில் மாற்றி அமைக்கப்பட்டது.

 

நோக்கு

நிலைபேறான கமநல மற்றும் கிராமிய அபிவிருத்திக்கு அவசியமான அறிவினைப் பிறப்பித்து விநியோகிக்கும் தலைவராக அமைதல்.

 

பணி

ஆராய்ச்சி மற்றும் பயிற்சியினூடாக கமநல மற்றும் கிராமியத் துறைக்கு வலுவூட்டல்.

 

நோக்கங்கள்

 

 • அறிவினைப் பிறப்பித்தல் மற்றும் உரிய நேரத்தில் விநியோகித்தல் மூலமாக கொள்கை ரீதியான செயற்பாட்டினை மிகுந்த பயனுறுதி கொண்டதாக மாற்றுதல்.
 • தேசிய கொள்கை தொடர்பான சிக்கல்கள் பற்றி சுயாதீனமான மதிப்பீட்டினை வழங்குவதனூடாக பொது மக்களுக்கு விழிப்பூட்டுதல்.
 • நிறுவகப் பதவியணியின் கொள்திறன் மற்றும் நிறுவனத்தின் அறிவுத்தளத்தை முன்னேற்றுவதற்கான முதலீடுகளைச் செய்வதனூடாக சமூக - பொருளாதார கொள்கைப் பகுப்பாய்வுக்கான கொள்திறனைப் பலப்படுத்தல்.
 • பயிற்றுவித்தல் மூலமாக கிராமிய அபிவிருத்தி மீது ஆர்வம் கொண்டுள்ளவர்களின் கொள்திறனை விருத்தி செய்தல்.

 

குறிக்கோள்கள்

 

 • கொள்கை வகுப்போர், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு உரிய நேரத்தில் சந்தை தகவல்களை விநியோகித்தல்.
 •  கமநலக் கொள்கைகளின் திட்டமிடல் முந்துரிமைகளை இனங்காணல்.
 • கமநல சிக்கல்கள் பற்றிய ஆயராய்ச்சிகளை திட்டமிடுவதற்கான முந்துரிமைகளை விதித்தல்.
 • அரச / தனியார்துறை பிரிவுகளைச் சேர்ந்த அமைப்புக்கள். பல்கலைக்கழகங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் / முகவராண்மைகளுடன் தொடர்புகளைக் கட்டியெழுப்புதல்.
 • அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற திறமையும் மனநிறைவும் கொண்ட ஊழியர் குழாமினை சேவையில் ஈடுபடுத்துதல்.

 

உபாய முறைகள்

 

 • ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுக்களைப் பலப்படுத்தல்.
 • தொனிப்பொருள் முறைகள் பற்றிய இணக்கப்பாட்டுக்கு வரல்.
 • பல்வேறு வகைகளைச் சேர்ந்த வெளியீடுகளின் ஒத்த தன்மை பற்றி பொறுப்பு வகித்தல் - தயாரிப்பு, அட்டைப்படப் பக்கம், பக்க இலக்கமிடல், எழுத்துக்களின் அளவும் வகையினமும்.
 • ஆராய்ச்சி முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது ஆவண மீளாய்வுப் பணிகளை முன்னேற்றகரமாக்குதல்.
 • வெளியிட முன்னர் அனைத்து ஆராய்ச்சி அறிக்கைகளையும் சமநிலையில் மீளாய்வு செய்த பின்னர் வெளிவாரி மீளாய்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • நிறுவன செய்திமடலின் ஒவ்வொரு இதழையும் வெளியிடுகையில் அதற்கான பொறுப்பினை சம்பந்தப்பட்ட பிரிவிடம் கையளித்தல்.
 • தொழில்சார் பதிப்பாசிரியரொருவரின் சேவையை உறுதிப்படுத்துவதற்காக கொடையாளிகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளல்.
 • உள்ளூர் மொழிகளில் ஆராய்ச்சி அறிக்கைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளல்.
 • முதுநிலை மட்டத்திலான ஆராய்ச்சியாளர்களைச் சேர்த்துக்கொள்ளல்.
 • ஐ. நா. அ. நிகழ்ச்சித்திட்டம் மூலமாக வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழிகளைக் கண்டறிதல்.
 • பல்கலைக்கழகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளல்.
 • ஆண்டிறுதிக் கருத்தரங்கின் பின்னர் ஆராய்ச்சி முடிவுகளை விநியோகித்தல்.
 • அளவிட வேண்டிய செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுகஞ் செய்தல்.
 • அந்தந்த பிரிவுகளின் அபிவிருத்திப் பணிகளை ஏற்பாடு செய்தல்.
 • வெளியீடுகளின் அச்சுப்பதிப்புத் தரத்தை முன்னேற்றகரமாக்கல்.

 

செயற்பாடுகள்

 

 • சந்தை தகவல்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விநியோகித்தல்.
 • சந்தை சிக்கல்களை புலனாய்வு செய்தல்.
 • பாவனையாளர்களின் நடத்தைப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்தல்.
 • அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை மதிப்பீடு செய்தல்.
 • கமநல மற்றும் கிராமிய அபிவிருத்தி கருத்திட்டங்களினதும் நிகழ்ச்சித்திட்டங்களினதும் தாக்கங்களை மதிப்பீடு செய்தல்.
 • உயர்ந்த தரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவசியமான ஆய்வுகளை மேற்கொள்ளல்.
 • கமத்தொழில் கொள்கைகளைப் பகுப்பாய்வு செய்தல்.
 • உத்தேச அபிவிருத்திக் கருத்திட்டங்கள் பற்றிய சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்ளல்.
 • உள்ளீடுகளை வழங்குதலும் அவற்றின் உதவிச் சேவைகளுடன் தொடர்புடைய சிக்கல்கள் பற்றிய ஆராய்ச்சிகளை நடாத்துதலும்
 • நீர்வள முகாமைத்துவம் மற்றும் நீர் வழங்கப்படுகின்ற விவசாயத்துறை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
 • சுற்றாடல் மற்றும் இயற்கைவள முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்தல்.
 • நீர்ப்பாசன நிறுவனங்கள் மற்றும் நிறுவனம்சார் கொள்கைகள் பற்றிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • தேசிய முந்துரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் / செயலமர்வுகள் / சம்மேளனங்களை ஏற்பாடு செய்தல்.
 • சிறப்பான விடயத்துறைகள் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை பொறுப்பேற்பதன் மூலமாக வெளிவாரிக் கேள்விகளை நிவர்த்தி செய்தல்.
 • நூல்நிலைய வசதிகளையும் கட்புல - செவிப்புல மூலங்களையும் விருத்தி செய்தல்.
 • ஆராய்ச்சிகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களை விநியோகிப்பதற்காக தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பாவனையைப் பலப்படுத்தல்.
 • பணியாளர் குழாமின் திறன்களையும் திறமைகளையும் விருத்தி செய்தல், அத்துடன்.
 • திறமைகள் மற்றும் சொந்த ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல், மதிப்பீடு செய்தல், அலுவலகத்திற்குள்ளே இடங்களை மாற்றுதல் மற்றும் பதவியுயர்த்தல்.

 

தாபனக் கட்டமைப்பு

 

இந்நிறுவனம் ஆளுகைச் சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படுவதோடு மேற்படி ஆளுகைச் சபை இந்நாட்டின் கிராமிய மற்றும் கமநல அபிவிருத்தியுடன் தொடர்புபடுகின்ற பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. கமத்தொழில் அமைச்சின் செயலாளர் சபையின் தவிசாளராகப் பணியாற்றுகின்றனர். நிறுவகத்தின் ஒட்டுமொத்தமான கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலான பொறுப்பினை இந்த ஆளுகைச் சபையே வகிக்கும். பணிப்பாளர் நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயலாற்றி வருகின்றார். பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) மற்றும் பதிவாளர் முறையே பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளையும் நிர்வாகப் பணிகளையும் முகாமைத்துவம் செய்ய பணிப்பாளருக்கு உதவி வழங்குகின்றனர்.

 

நிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கதை திட்டமிடும் போதும் ஆய்வு செய்யும் போதும் ஆளுகைச் சபைக்கு உதவுவதற்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவொன்று உண்டு. நிறுவகத்தின் பணிப்பாளர் தவிசாளராகப் பணியாற்றுகின்ற இக்குழுவிற்கு பிரதிப் பணிப்பாளரும் (ஆராய்ச்சி) நிறுவகத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்களும், கமத்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தியுடன் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறைகளின் முகாமைத்துவம் பற்றிய சிறப்புத் தேர்ச்சிபெற்ற நிறுவகத்திற்கு வெளியேயுள்ள புலமைசாலிகளும் அங்கம் வகிக்கின்றனர். பல்கலைக்கழகங்களிலிருந்தும் மத்திய வங்கியிலிருந்தும் கொள்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற நிறுவகங்களிலிருந்தும் பெறப்பட்ட சிரேட்ட விஞ்ஞானிகள் இந்த அணியில் இடம்பெறுவர்.

 

இந்நிறுவனத்தின் பணிகள் ஆராய்ச்சிப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுத் தயாரிப்பு, நிகழ்ச்சித்திட்டத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பிரிவு ஆகிய உப கூறுகளைக் கொண்டதாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆர்வம் காட்டப்படுகின்ற நிகழ்காலத் துறைகளை அடிப்படையகாக் கொண்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆயினும், பல்வேறு பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பல்துறை ஆராய்ச்சிக் குழுக்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பணிகளின் பெரும்பங்கினை அமுலாக்கி வருகின்றன. நிறுவகத்தில் காணப்படுகின்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பிரிவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

 

 • கமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீட்டுப் பிரிவு (APPE),
 • கமத்தொழில் வளங்கள் முகாமைத்துவப் பிரிவு (ARM)
 • சுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவப் பிரிவு (EWRM),
 • சந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத்தொழில் முயற்சிப் பிரிவு (MFPA),
 • மனிதவள மற்றும் தாபன அபிவிருத்திப் பிரிவு (HRID)

ஒவ்வொரு பிரிவுக்கும் முதுநிலை ஆராய்ச்சி உத்தியோகத்தரொருவர் தலைமை வகிப்பதோடு, அவர் தொடர்புடைய பிரிவின் நிர்வாக அலுவல்கள் மற்றும் ஒட்டுமொத்தமான இணைப்பாக்கச் செயற்பாடு பற்றிய பொறுப்பினையும் வகிக்கிறார். ஒவ்வொரு பிரிவுடனும் இணைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சியாளர்களும் உதவிப் பணியாளர் குழாமும் அப்பிரிவின் வருடாந்த திட்டத்தை அமுலாக்கும் பொருட்டு பிரிவுத் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

 

பதிவாளர் தலைமை வகிக்கும் நிர்வாகப் பிரிவு நிறுவகத்தின் நிர்வாகப் பணிகளை ஈடேற்றிவருகின்றது. இதற்கு மேலதிகமாக இரண்டு உதவிக் கூறுகள் உள்ளன. (1) தரவு மற்றும் தகவல் முகாமைத்துவப் கூறு (DIM) மற்றும் (2) வெளியீட்டுக் கூறு (PU) என்பவையே அவை. ஒரே கூரையின் கீழ் அவசியமான தரவுகள் அனைத்தையும் வழங்கக்கூடிய வகையில் தரவு மற்றும் தகவல் முகாமைத்துவக் கூறு பல்வேறு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட விவசாயத் தரவுத் தளமொன்றைப் பேணி வருகின்றது. பிரதானமாக கமநல அபிவிருத்தித் துறையைச் சேர்ந்த நூல்கள், பருவ வெளியீடுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக சிறப்பாக பேணிவரப்படுகின்ற நூல்நிலையமொன்றையும் நிறுவகம் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

harti bann

 

webp