கமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீட்டுப் பிரிவு அரச துறையினதும் அரச சார்பற்ற துறையினதும் தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்தி கருத்திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தலுடன் தொடர்புடைய ஆராய்ச்சிக் கற்கையினை மேற்கொள்ளும் பணிகளில் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றது. காணி, பயிர்ச்செய்கை, கால்நடை வளம், நுண்நிதியியல், ஆண்-பெண் சமூகநிலை பற்றிய கற்கை, விவசாய அறிவு முறைமை மற்றும் கமநல சேவைகளின் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு துறைகள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்டுகின்றன. இதற்கு மேலதிகமாக, சிறிய காணிச் சொந்தக்கார விவசாயிகளை அபிவிருத்தி செய்தலுடன் தொடர்புடைய அரசாங்க கொள்கைகளை மீளாய்வு செய்து பகுப்பாய்வதிலும் இப்பிரிவு ஈடுபட்டு வருகின்றது. இப்பிரிவு கீழே குறிப்பிடப்பட்ட பரவலான தொனிப்பொருள் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

  • கமத்தொழில் மற்றும் கிராமிய அபிவிருத்திக் கொள்கைகளை மீளாய்வு செய்தலும் பகுப்பாய்வு செய்தலும்.
  • கமநல மற்றும் கிராமிய அபிவிருத்தியுடன் தொடர்புடைய கருத்திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் ஆய்வு செய்தலும் பகுப்பாய்வு செய்தலும்.
  • கமத்தொழில் கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களின் தாக்கங்களை மதிப்பீடு செய்தல்.
  • காணிச் சிக்கல்களை புலனாய்வு செய்தல்.
  • வறுமைநிலை பற்றியும் அது சம்பந்தமான ஆய்வுகள் பற்றியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  • தொழிலாளார்கள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய கற்கை.
  • பன்முகப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான நலன்பெறுநர்களின் பங்கேற்புடன் தொடர்புடைய பகுப்பாய்வு.

 

harti bann

 

webp