மக்களின் பட்டினி, போசாக்கின்மை மற்றும் வறுமையை ஒழித்துக்கட்டும் உயரிய குறிக்கோளுடன் இலங்கையின் கமநலத் துறையின் கமத்தொழில் முறைகளின் உற்பத்தித்திறன், இலாபத் தன்மை மற்றும் பேண்தகுநிலை தொடர்பில் விவசாய வளங்கள் எவ்வளவுக்கு வினைத்திறன் மிக்கதாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றதென்பது பற்றிய ஆராய்ச்சிக் கற்கைகளை மேற்கொள்ளல் தொடர்பில் இப்பிரிவின் விசேட கவனஞ் செலுத்தப்படுகின்றது. சம்பந்தப்பட்ட பிரதான விவசாய வளங்களாக அமைவன காணி, உழைப்பு, விவசாய உள்ளீடுகள், விவசாயப் பண்ணைச் சக்தி மற்றும் விரிவாக்கப் பணிகள் போன்றவையாகும். இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற பெரும்பாலான ஆராய்ச்சிக் கற்கைகளில் கவனஞ் செலுத்தப்படுகின்ற குவிமையமாக அமைவது உணவுப் பயிர்கள், கால்நடை வளங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை முறைகள் ஆகியவையே. ஆய்வுகளிலிருந்து தேடிக்கொண்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாயக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்காக விவசாய மறுசீரமைப்பு உரிய வகையில் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரிவு கீழே குறிப்பிட்ட தொனிப்பொருள் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

  • விவசாய மறுசீரமைப்பு
  • கமத்தொழில் கொள்கை
  • உற்பத்திப் பொருளாதாரம்
  • கமத்தொழில் அறிவு முறைமைகள்
  • கமத்தொழில் முறைகள்
  • விவசாயக் கைத்தொழில்
  • உணவுப் பாதுகாப்பு
  • விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

 

harti bann

 

webp