இலங்கையின் சிறு விவசாயத்துறை மீது விசேட கவனஞ் செலுத்தி சுற்றாடல் மற்றும் நீர்வள முகமைத்துவ சிக்கல் பற்றி சமூக, பொருளாதார மற்றும் தாபனப் பிரிவு தொடர்பான ஆராய்ச்சிகளையும் புலனாய்வுகளையும் நடத்துதல் சுற்றாடல் மற்றும் வறுமையைத் தணித்தல் போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளின் மத்தியில் நீர் மற்றும் சுற்றாடல் வள முகாமைத்துவ சிக்கல்களை விசாரணை செய்யும் பணிகளை இப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

நீர்க்கொள்கை, நீர்ப் பாவனையாளர்களின் சங்கங்கள் மற்றும் பிற நிறுவன வேலைத்திட்டங்கள், நீருடன் தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவம், சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் விவசாய மக்கள் உறவுகள் போன்ற பல்வேறு விடயங்கள் மத்தியிலேயே சுற்றாடல் மற்றும் நீர் முகாமைத்துவம் மீது இப்பிரிவு அதிக கவனத்தைச் செலுத்த தெரிவு செய்துள்ளது. கருந்தரங்குகள், சம்மேளனங்கள், உரையாடல்கள் மற்றும் செயலமர்வுகளை இணைப்பாக்கம் செய்வதன் மூலமாகவும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக அறிவினை பகிர்ந்தளிப்பதன் மூலமாகவுமே இப்பிரிவு சுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்கள் சம்பந்தமாக செயலாற்றி வருகின்றது. நீர், சுற்றாடல், ஆட்சி மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான நிகழ்கால மற்றும் எதிர்கால சிக்கல்கள் பற்றிய கருத்திட்ட முகாமைத்துவமும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தலும் அவற்றின் முடிவுகள் மற்றும் விதப்புரைகளை வெளியிடுவதும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் சுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவப் பிரிவு நீர் - சமூகம் - சுற்றாடல் - பொருளாதாரம் ஆகியவற்றுக்கிடையில் நிலவும் தொடர்புகளை வெளிக்காட்டுவதற்கான கொள்திறனையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப செயலாற்றி வருகின்றது. இதனோடு தொடர்புடைய சேவைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளை தயாரித்தல், தாபனக் கொள்திறனைக் கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கல், கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆலோசனை சேவைகள், நீரும் சுற்றாடலும் போன்றவை தொடர்பாக நாட்டின் மனித வளங்கள் மற்றும் தாபன அபிவிருத்தியின்பால் கவனஞ் செலுத்தி இப்பிரிவு பணியாற்றி வருகின்றது.

இப்பிரிவு கீழே குறிப்பிட்ட விரிவான துறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

  • நீர் விநியோகத்திற்கு புத்துயிரளித்தல்.
  • மழை நீரைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற - பயிர் செய்கை முறைகளின் நீர் முகாமைத்தவம்.
  • நீர்க் கட்டுப்பாட்டு சிக்கல்கள்
  • விவசாய அமைப்புகள், விவசாயக் கம்பெனிகள் மற்றும் நீர்வள முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பிற தாபன வேலைத்திட்டங்கள் பற்றிய கற்கை.
  • விவசாயப் பண்ணை மட்டத்தில் மாற்று நீர் விநியோக முறைமைகளின் மதிப்பீடு மற்றும் சாத்தியவள ஆய்வுகள்.
  • நீர்ப்பாசன பொருளாதாரம்.
  • சுற்றாடல் சார்ந்த பொருளாதாரமும் கொள்கைகளும்.
  • விவசாய - சுற்றாடல் சிக்கல்கள். அதன் விளைவாகத் தோன்றுகின்ற பிரச்சினைகளும் முன்வைக்கக்கூடிய தீர்வுகளும்.
  • சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA).
  • நீருடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களால் தோன்றுகின்ற நீர் மற்றும் விவசாய அபிவிருத்தி தொடர்பான சிக்கல்கள்.

 

harti bann

 

webp