நூலகம் நூலகம்

 

இந்நிறுவகத்தின் நூல்நிலையத்தில் 21,000 நூல்களும் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) 20,000 செய்தி மடல்களும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும், பிரசுரிக்கப்படாத அறிக்கைகளும், தேசப்படங்களும், வருடாந்த அறிக்கைகளும், செய்தித்தாள் கட்டுரைகளும் உள்ளன. பருவ சஞ்சிகைகள், செய்தித்தாள் கட்டுரைகள், வருடாந்த அறிக்கைகள் போன்றவை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வெகுமதிகளாகவோ பரிமாற்ற அடிப்படையிலோ அடிக்கடி கிடைக்கின்றன. இந்த நூல்நிலையம் 21 வெளிநாட்டு செய்தி மடல்களுக்கும் 28 உள்ளூர் செய்தி மடல்களுக்கும் சந்தாப்பணம் செலுத்தியுள்ளது.

இந்த நூல்நிலையம் நிறுவகத்தின் ஆராய்ச்சிப் பதவியணிக்கு விசாலமான பரப்பெல்லையில் சேவை வழங்கி வருகின்றது. அச்சேவைகளில் இணைந்த வசதிகள், இணைந்த நூல்நிலையங்களிலிருந்து ஆவணங்களை ஒப்படைக்கும் சேவைகள், நூல்நிலையங்களுக்கிடையிலான கடன் வசதிகள், புதிதாக கிடைத்த நூல்கள் மற்றும் செய்தி மடல்களிலிருந்து துரித இலத்திரனியல் சேவைகள், நிழற் பிரதிகள் மற்றும் இணையத்தள வசதிகள் போன்றவை அடங்குகின்றன. நிறுவகத்தின் பணியாளர் குழாம் தவிர்ந்த நிறுவனத்திற்கு வருகை தருகின்ற வெளித்தரப்பினர், ஆலோகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் எனும் வகையில் பலர் இந்த நூல்நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பின்வரும் விடயத்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரசுரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.

 • கமநலக் கட்டமைப்பு
 • கமநல மறுசீரமைப்பு
 • விவசாயக் கடன்
 • விவசாய அபிவிருத்தி
 • விவசாயப் பயிர்கள்
 • காணிச் சீர்திருத்தம்
 • நீர்ப்பாசனம்
 • நீர் முகாமைத்துவம்
 • பொருளாதார அபிவிருத்தி
 • சமூக விஞ்ஞானம்
 • அரசியல்
 • வறுமை தொடர்பான புள்ளிவிபரத் தரவுகள்
 • கிராம அபிவிருத்தி
 • ஆண் - பெண் சமூக நிலை சிக்கல்கள்
 • நாடோடிக் கதைகள்
 • பெருந்தோட்டங்கள்
 • உணவு மற்றும் போசாக்கு
 • சுற்றாடலும் இயற்கை வளங்களும்
 • உயிர்த் தொழில்நுட்பம்
 • வரலாறு
 • சந்தைப்படுத்தல்
 • வர்த்தகம்
 • ஆராய்ச்சி வழிமுறைகள்

நூல்நிலையமென்பது இலங்கையின் விவசாய தகவல் வலையமைப்பின் (AGRINET) முனைப்பான பங்குபற்றுநர் மத்தியில் உள்ள ஒரு நிறுவனமாகும். நூல்நிலையம் நூல்கள், செய்திடமல் கட்டுரைகள் பற்றிய நூற்பெயர்ப்பட்டியல் தரவுகளை கமத்தொழில் கொள்கைகள் பற்றிய இலங்கை மன்றம் பேணிவருகின்ற தேசிய கமத்தொழில் நூற்பெயர்ப்பட்டியலில் (NAB) உள்ளடக்கும் பொருட்டு இடையறாமல் வழங்கி வருகின்றது.

நூலகத்தின் நூற்பெயர்ப்பட்டியல் தரவுத் தளத்தை கணனிமயமாக்கல் WINSIS எனப்படும் மென்பொருளைப் பாவித்து மேற்கொள்ளப் பட்டதோடு இது 8627 இலத்திரனியல் அறிக்கைகளை உள்ளடக்குகின்றது. தற்போது 10 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பிரசார பரிமாற்ற வேலைத்திட்டமொன்று இந்த நூல்நிலையத்தினால் அமுலாக்கப்பட்டு வருகின்றது.

பரந்து விரிந்துள்ள வளங்களை கூட்டாக பாவிக்கும் நோக்கத்துடன் இந்நூல்நிலையம் நூல்நிலையங்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகளில் முனைப்பாக பங்கேற்று வருகின்றது. அத்துடன் நூல்களை வாசிக்கும் வசதிகள், நூல்நிலையங்களுக்கிடையில் நூல்களைப் பெற்றுக் கொள்ளல், கணனி மூலமாக விடயங்களை தேடல், நூல்கள் பற்றிய ஆய்வு, கடிதங்களைத் துரிதமாக தேடும் சேவை, நிழற்பிரதிகள் மற்றும் ஆவண விநியோக சேவை போன்ற பல்வேறு சேவைகள் நூல்நிலையத்தினால் வழங்கப்படுகின்றன.

 

harti bann

 

webp